மன்னார்குடியில் இன்று சசிகலா சகோதரர் திவாகர்ன் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது, மைனாரிட்டியாக உள்ள தமிழக அரசை ஆளுநர் இனியும் வேடிக்கை பார்க்க கூடாது. சபாநாயகர் இருக்கும் போது துணை சபாநாயகர் உரிமை குழு நோட்டீஸ் அனுப்பியது கேள்விக்குறி. தேர்தல் ஆணையத்தில் கொடுத்த பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற இயலாது. முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பது தமிழகமே அறிந்த விஷயம்
ஆளுநர் கருத்தை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டார்களா? பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் எங்கள் தரப்பு எம்.எல்.ஏக்கள் அனுப்பபடுவார்கள். முதலமைச்சர் அணி சார்பில் பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது: தினகரன் சார்பில் விரைவில் பொதுக்குழு கூட்டப்படும்.ஊழல் அமைச்சர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் இருக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்