தினகரன் கவுண்டவுன் நாளை முதல் ஸ்டார்ட்

Sugar & Spice, Knack Art Productions, Major Gowtham Directorial, "Kannula Kaasa Kaatappa"

நாளை அதிமுக சந்திக்க போகின்ற நிகழ்வானது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம் அதிமுக அம்மா அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைவதற்கு துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் 60 நாட்கள் கால அவகாசம் வழங்கிருந்தார்.

அவர் கூறிய அந்த அறுபது நாட்கள் கால கெடு இன்றோடு முடிகிறது. இந்நிலையில் அதிமுகவில் இரண்டு கட்சிகளும் இணைந்த பாடில்லை ஆகையினால் டி.டி.வி.தினகரன் நாளை அதிமுக தலைமை அலுவலகம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டி.டி.வி.தினகரன் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து கழகத்தில் உள்ள நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.