டிக்கிலோனா என்ற டைட்டிலுக்கு கிடைத்த அமேசிங் ரெஸ்பான்ஸ்

திரையில் நடிகர் சந்தானத்தைப் பார்க்கும் போதே ஒரு கலகலப்பு கலந்த வைப்ரேசன் மனதுக்குள் பரவும். தனது ரசிகர்கள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த பேமிலி ஆடியன்ஸுக்கும் பிடித்த வகையில் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சந்தானம் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் டிக்கிலோனா. இந்த டிக்கிலோனா என்ற தலைப்பிற்கு நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி செந்தில் இருவரும் மிகப்பெரிய வரலாறையே ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக 80-கிட்ஸ், 90-கிட்ஸ் வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு பெயர் டிக்கிலோனா.
பெயரிலே இப்படி காமெடியை அள்ளிக்கொண்ட இப்படத்தில் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார்.  பிரபல எழுத்தாளரும், தமிழ்சினிமாவில் பல வெற்றிகரமான திரைப்படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்தவருமான கார்த்திக் யோகி  இப்படத்தை இயக்குகிறார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும் சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்கள்.

ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு என்பது ஒரு சிலைக்கு தலை செய்வது போல. டைட்டில் அந்தந்த ஜானருக்கு ஏற்ற டைட்டிலாகவும் இருக்க வேண்டும்.  கேட்சிங்காகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் நடிகர் சந்தானம் படத்தின் டைட்டிலே பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது.

டிக்கிலோனா என்ற டைட்டிலை படக்குழு டிக் அடித்தற்கான காரணம் படம் பார்க்கும் போது ரசிகர்களுக்குப் புரியும் என்கிறார் இயக்குநர். இப்படத்தின் ஏனைய நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் வெகுவிரைவில் வெளியாக இருக்கிறது. தகதக கோடை விடுமுறையை கலகல காமெடியால் குளிர்விக்கும் விதமாக படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.