மார்ச் 1, 2018 முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தப்படி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த வேலை நிறுத்தம் நேரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கியூப் நிறுவனம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் என பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு வருகிறது ஆனால் அதற்க்கான முடிவு இன்னும் எட்டப்படாமல் இருக்கிறது என்பது தயாரிப்பாளர்கள் அனைவருக்கு வருத்தமளிக்கிறது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ‘AEROX’ என்னும் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடருடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதே போல தயாரிப்பாளர் சங்கத்தின் சொந்த மாஸ்டரிங் வசதியுடன் DCI 2k, 4k ப்ரஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்க, டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடரான ‘மைக்ரோப்ளக்ஸ்’ நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த முயற்சி திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கம் என கருதப்படுகிறது. இதன்மூலம் தயாரிப்பாளர் சங்கத்தில் இனிமேல் அனைத்து படங்களுக்கும் மாஸ்டரிங் செய்யப்பட்டு அனைத்து தியேட்டர்களுக்கும் நேரடியாக கன்டன்ட் கொடுக்கபடும். தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக மாஸ்டரிங் செய்யப்படுவதினால் மாஸ்டரிங்குக்கான கட்டணம் குறைய வாய்புகள் அதிகமாக உள்ளது.