சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், அனன்யா, ஜார்ஜ் விஜய், சாய் குமார், விவேக் பிரசன்னா, ரமேஷ் திலக், தங்கதுரை, பிரேம், மாறன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் டீசல்.
கடலோரத்தில் வடசென்னையில் ஒரு கிராமம் இருக்கிறது. அந்த இடத்தில் திருட்டுத்தனமாக குருடாயில் எடுத்து அதனை விநியோகம் செய்து வருகிறார் சாய்குமார் மற்றும் அவரது குழுவினர். அந்த குருடாயிலிருந்து கிடைக்கும் டீசலை திருட்டுத்தனமாக விலை குறைவாக விற்று பணம் சம்பாதிக்கிறார்கள்.
சாய்குமார் நண்பன் இறந்துவிட அவரது மகனான ஹரிஷ் கல்யானை வளர்த்து வருகிறார் சாய்குமார். அவர் செய்யும் பிசினஸை ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து செய்து வருகிறார்.
அதிலிருந்து வரும் பணத்தை மக்களின் நல்வாழ்விற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.
இவர்களுக்கு உதவியாக இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆன வினய் ஒரு கட்டத்தில் அதிக பணம் சம்பாதிப்பதற்காக அந்த தொழிலை விவேக் பிரசன்னாவை செய்ய களம் இருக்கிறார்.
இதனால் வினய்க்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் பிரச்சனை ஏற்பட, அது பெரிய சண்டையில் முடிய வினய் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
இதனால் ஹரிஷ் கல்யாண் காவல்துறை கைது செய்ய முயற்சி செய்ய சாய்குமார் ஹரிஷ் கல்யாணை தலைமறைவாக இருக்க செய்கிறார்.
தலை மறைவாக இருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் கடலில் ப்ராஜெக்ட் செய்ய போகும் அதுல்யா ரவிக்கு காதலும் ஏற்படுகிறது.
குணமடைந்து மருத்துவமனையிலிருந்து திரும்பி வரும் வினய் ஹரிஷ் கல்யாணை பழிவாங்க நினைக்கிறார்.
வினய்க்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையில் யார் வென்றார்கள்? குருடாயில் மூலம் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்களா? இல்லையா? என்பதே டீசல் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : தேவராஜுலு மார்க்கண்டேயன்
இயக்கம்: சண்முகம் முத்துசாமி
இசை : திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவாளர் : ரிச்சர்ட் எம்.நாதன் & எம்.எஸ்.பிரபு
சண்டை : ஸ்டண்ட் செல்வா & ராஜசேகர்
எடிட்டர் : சான் லோகேஷ்
கலை இயக்கம் : ரெம்பன் பால்ராஜ்
நடன இயக்குனர் : ராஜுசுந்தரம், ஷோபி, ஷெரீப்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்

