டைனோசர்ஸ் விமர்சனம்

கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரிப்பில், எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில், உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் ப்ரியா தேவா, மனேக்ஷா, ஜானகி, அருண், அருள் பாலாஜி, கவின் ஜெய்பாபு உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடிப்பில் ரோமியோ பிச்சர்ஸ் வெளியிட்டிருக்கும் படம் “டைனோசர்ஸ்”.

கணவர் இல்லாத ஜானகிக்கு அட்டு ரிஷி மற்றும் உதய் கார்த்திக் இருவரும் மகன்களாக வருகின்றனர். ரிஷியின் உயிர் நண்பன் மாறா… பிரபல ரெளடியான மானேக்‌ஷாவிடம் அடியாளாக இருந்து, திருமணம் ஆனதும் திருந்தி வாழ்ந்து வருகிறார் மாறா.

ரெளடியாக இருக்கும்போது செய்த ஒரு கொலைக்காக, பல மாதங்கள் கழித்து மாறாவையும், அவரது டீமையும் காவல் நிலையத்தில் சரணடைய சொல்கிறார் மானேக்‌ஷா. ஆனால் தன் நண்பனுக்காக அந்த கொலை பழியை தான் ஏற்று கொண்டு ஜெயிலுக்குச் செல்கிறார் அட்டு ரிஷி.

இந்த சூழ்நிலையில், கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் சகோதரர் அருண் மற்றுமொரு ரெளடி. இவரிடம் சிக்கி கொலை செய்யப்படுகிறார் மாறா. மாறாவின் கொலைக்கு எதிர்பாராத விதமாக நாயகன் உதய் கார்த்திக் காரணமாகி விடுகிறார்.

மாறாவின் கொலைக்கு எப்படி உதய் கார்த்திக் காரணம் ஆனார்? மாறாவின் கொலைக்கு பழி தீர்க்கப்பட்டதா.? இல்லையா? என்பதே “டைனோசர்ஸ்” படத்தின் மீதிக் கதை.

உதய் கார்த்திக், அட்டு ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, பிரபல புகைப்பட கலைஞர் மானேக்‌ஷா, ஜானகி மற்றும் அருண் என அனைவருமே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்

இசை : போபோ சசி
ஒளிப்பதிவு : ஜோன்ஸ் வி ஆனந்த்
எடிட்டிங் : கலைவாணன்
சண்டை : ஸ்டன்னர் சாம்
பாடல்கள் : எம்.ஆர்.மாதவன்
கலை : வலம்புரிநாதன்
ஒப்பனை : தசரதன்
நடனம் : தஸ்தா
தயாரிப்பு மேற்பார்வை : சஞ்சய் கிருஷ்ணன்
தயாரிப்பு நிர்வாகி : கோகுல் ராம்
பிஆர்ஒ : சதீஷ் ஏய்ம்