தமிழக காவல்துறையினால் முடிக்க முடியாத பல கேஸ்கள் இருக்கும் ஆவணக் காப்பகத்திலிருந்து ஏதாவது ஒன்றை எடுத்து காவல்துறை உதவி ஆய்வாளர் பயிற்சி பெறுபவர்கள் விசாரிக்கலாம் என மேலதிகாரி கூறுகிறார்.
கதாநாயகன் அருள்நிதி தன் கண்ணை மூடிக் கொண்டு ஒரு ஃபைலை தேர்வு செய்கிறார். அருள்நிதி தேர்வு செய்து எடுத்த புகார் ஃபைல், ஊட்டியில் 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொள்ளை மற்றும் கொலை வழக்கு கண்டுபிடிக்காமல் இருந்த புகார் ஃபைல்.
அருள்நிதி ஊட்டி சென்று தனது விசாரணையை தொடங்குகிறார்.
16 ஆண்டுகளாக கண்டுபிடிக்காமல் இருந்த புகாரை விசாரிக்கப் போய் மேலும் சில பல மர்மங்களுக்கான விஷயங்கள் தெரிய வருகிறது.
அருள்நிதிக்கு தெரியவரும் மர்மங்கள் என்ன? மர்மங்களுக்கு விடை கிடைத்ததா? கிடைக்க வில்லையா? என்பதுதான் டைரி படத்தின் மீதி கதை.
நடிகை-நடிகர்கள்:
அருள்நிதி, பவித்ரா ஷாரா, மாரிமுத்து, ஜெயபிரகாஷ், கிஷோர், சாம்ஸ், அஜய் ரத்னம், ருத்ரா, சோனியா சுரேஷ், செந்தி, ஓசூர் மாதேஸ்வரன், சேலம் புகழேந்தி, சென்னை எகான், பவித்தர், அல்போன்ஸ் ஜெயபாலன், சூரஜ் பாப்ஸ், சதீஷ் கண்ணன், ஜெயலட்சுமி, தனம் (நக்கலிட்டில்ஸ்), ரஞ்சனா நாச்சியார், கார்த்திக் ராமசாமி, சேதுபதி, பராஜுனா சாரா, பி.எஸ். ஜஸ்வந்த், எம்.மகாதேவ், தணிகை, சுரேந்திர தாக்கூர் , ஹரிணி, எம்.எஸ், உதய் குமார், ராஜதுரை, மதன், மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
எழுத்து & இயக்கம் : இன்னாசி பாண்டியன்.
ஒளிப்பதிவு : அரவிந்த் சிங்.
படத்தொகுப்பு : எஸ்.பி.ராஜா சேதுபதி.
இசை : ரான் ஈதன் யோஹான்.
தயாரிப்பு : பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்.
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா D’one.