நந்தகுமார் தயாரித்து, ஐயப்பன் இயக்கிய ‘தோனி கபடி குழு’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை இயக்குநர் ஐயப்பன், நந்தகுமார், கொடுத்தார். இந்தப் படத்தில் நான் முதன்மை வில்லனாக கதாபாத்திரமேற்று நடிக்கிறேன். அதற்கு, இயக்குனர் ஐயப்பன், தயாரிப்பாளர் நந்தகுமாருக்கு நன்றி. இதற்கு முன் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.
மேலும், ‘வேட்டை நாய்’ படத்திலும் நடிக்கிறேன். இப்படத்தில் R.K.சுரேஷ் கதாநாயகனாகவும், ராம்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இப்படத்தை ‘மன்னாரு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜெய்சங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் வாய்ப்பு தந்திருக்கிறார் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் P.ஜோதிமுருகன், விஜய் கார்த்திக், இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். “வேட்டை நாய்” படமும் எனக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். இது தவிர, இன்னும் சில படங்களில் நடித்து வருகிறேன்.
எனது சொந்த ஊர் சேலம். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சேலத்தில் தான். அப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர். அம்மா வீட்டை நிர்வாகம் செய்கிறார். மனைவி ஹோமியோபதி மருத்துவர். அண்ணன், தங்கை என்று எல்லோருடைய ஆதரவும் எனக்கு உண்டு. படம் பார்த்துவிட்டு அனைவரும் மகிழ்ந்தார்கள். ஒரு கலைஞனுக்கு இதை விட மகிழ்ச்சி வேறு என்ன வேண்டும். கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு நடிகனாக வேண்டும் என்று ஆசை இருந்தது. 8 வருட கனவு ”தோனி கபடி குழு’ மூலம் நனவாகியது.
அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருடைய ஆதரவுடன் நல்ல நடிகராக வலம் வர வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.
‘தோனி கபடி குழு’ படத்தைப் பார்த்து விட்டு எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். என்னுடன் பல பேர் ‘செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள்.
சுமார் 8 வருட காலமாக வாய்ப்புக்காக பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள் என்று பலரிடமும் முயற்சி செய்திருக்கிறேன். அதனுடைய முயற்சிதான் இன்று நான் நடிகன். இன்றைய காலகட்டத்தில் படம் எடுப்பதைவிட வெளியிடுவது தான் சவாலான செயல்.
இப்படத்தில் முகம் சுளிக்கும் காட்சிகளோ, வசனங்களோ இல்லை. இயக்குநரும், அபிலாஷும் சரியான திட்டத்தோடு இப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஆகையால் தான் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய விளையாட்டான கபடியைப் பற்றி ஆணித்தரமாகக் கூறியிருக்கும் படம். இப்படியொரு படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகனா? வில்லனா? அல்லது குணச்சித்திரமா? என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகனாகத்தான் என்னைப் பார்க்கிறேன்.
அதேபோல், இயக்குநர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், இயக்குநர்களின் நடிகனாகவும் இருப்பேன்.
என்று மகிழ்ச்சியுடன் கூறினார் விஜித் சரவணன். தொடர்புக்கு : 08754575686