தில்ராஜா விமர்சனம்

கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio) சார்பில், கோவை பாலசுப்பிரமணியம் தயாரிப்பில், A.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “தில் ராஜா”.

நாயகன் விஜய் சத்யா சரியான நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவர் விஜய் சத்யா, மனைவி ஷெரின் மற்றும் தனது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

ஒருநாள் மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மூன்று பேரும் வெளியே சென்றுவிட்டு வரும்போது, ஒரு மிக பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்கள்.

அந்த பிரச்சினையில் மீள்வதற்காக விஜய் சத்யா செய்யும் பாதுகாப்பு நடவடிக்கையால், அவருக்கு மட்டும் இல்லாமல் அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுத்துகிறது.

இதனால், வில்லனின் ஆட்கள் ஒரு பக்கம் துரத்த, மறுபக்கம் காவல்துறை துரத்துகிறது. அதிலிருந்து விஜய் சத்யாவும், சத்யாவின் குடும்பமும் தப்பித்ததா? இல்லையா? என்பதே தில் ராஜா படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

திரைக்கதை, இயக்கம் : A.வெங்கடேஷ்
இசை : அம்ரீஷ்
பாடல்கள் : நெல்லை ஜெயந்தன், கலைகுமார்
ஒளிப்பதி : மனோ V.நாராயணா
கலை : ஆண்டனி பீட்டர்
நடனம் : செந்தாமரை
எடிட்டிங் : சுரேஷ் அர்ஷ்
ஸ்டண்ட் : சூப்பர் சுப்பராயன்
தயாரிப்பு மேற்பார்வை : நிர்மல்
புரொடக்ஷன் கண்ட்ரோளர் : பூமதி – அருண்
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்.
தயாரிப்பு நிறுவனம் : கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio )
தயாரிப்பாளர்  : கோவை பாலசுப்பிரமணியம்