தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் முதல் பாகத்தை விட மிகவும் ஜாலியான படைப்பாக இருக்கும். இந்த படம் ஹாரர் காமெடி வகையை சார்ந்த படமென்றாலும் படத்தில் நிறைய சீரியஸ் ஹாரர் காட்சிகள் இருக்கும். இந்த படம் கதாநாயகியின் கேரக்டர் மீது பயணிக்கும் கதையை கொண்டது. மலையாளத்தில் மிகவும் பிரபலமான ஸ்ரீதா சிவதாஸ் தான் இப்படத்தின் கதாநாயகி. கதைக்கு மலையாளம் பேசும் மலையாள பெண் தேவை என்பதால் தான் இவரை படத்தின் நாயகியாக தேர்ந்தெடுக்க காரணம். மொட்டை ராஜேந்திரன் , ஊர்வசி மற்றும் ஜில் ஜங் ஜக் புகழ் பிபின் ஆகியோர் இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
முதல் பகுதியை விட இந்த படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. நாங்கள் கடுமையாக உழைத்து அதிகம் கவனம் செலுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். தில்லுக்கு துட்டு பாகம் ஒன்று வெற்றிபெற்றதால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. செப்டம்பர் வெளியீடாக இப்படம் வெளியாக உள்ளது.