வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்

 
தம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கும், உமாபதி, யோகிபாபு அசத்தும் தேவதாஸ்.
‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய  படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா-யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் தேவதாஸ். 
இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகர் யோகி பாபு கலகலப்பூட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் முழுவதும் வலம் வருகிறார்.
மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இந்த  உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். 
இப்படம் பார்க்கும் அனைவரும் பல கட்டங்களில் தாங்கள் சந்தித்த, அனுபவித்த, கடந்து வந்த நினைவுகள் பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருக்கிறது திரைகதை.  
மனிஷா யாதவ், ‘சகா’ ஐரா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் உமாபதியோடு இணைகின்றனர். 
ஒளிப்பதிவாளர் யுகா காட்சி அமைப்புகளுக்கு வலு சேர்க்க, இப்படத்திற்கு தினேஷ் இசை அமைக்கிறார். படத்தொகுப்பு ரூபன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
உமாபதி ராமையா
யோகி பாபு
மனிஷா யாதவ்
ஐரா 
தயாரிப்பு :- வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ்
இரா மகேஷ்: கதை, திரைகதை, வசனம், இயக்கம்.
ரூபன்: படத்தொகுப்பு
யுகா: ஒளிப்பதிவு
தாமரை & ரோகேஷ்: பாடல்கள்
நிகில் முருகன்: மக்கள் தொடர்பு