‘தேவ்’ படத்தின் இருசக்கர வாகனப் போட்டியில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள BMW இருசக்கர வாகனங்களைப் பரிசாக வென்று பிரபலமாகியிருக்கிறார்கள் நவீன் குமாரும், அபர்ணாவும். கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் காதலர் தினமான பிப்ரவரி 14, 2019 அன்று வெளியான ‘தேவ்’ படத்தில் கார்த்தி, BMW பைக்கை ஓட்டிக்கொண்டு வருவார். அந்த பைக்கை வெல்வதற்காக சில கேள்விகள் அடங்கிய போட்டியில் – நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்திலோ அல்லது நண்பர்களோ சிறப்பானவர்களாக இருந்தால் 8 லட்சம் மதிப்புள்ள BMW சூப்பர் பைக்கை வெல்லலாம் என்று கூறியிருந்தார்கள்.
இது தவிர ‘தேவ்’ படத்தைப் பற்றி சில கேள்விகளுக்கு 100 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிலளிக்க வேண்டும்.
சிறந்த பதிலளித்த நவீன் குமார் மற்றும் அபர்ணா இருவரும் தேர்வு தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் தலா 8 லட்சம் மதிப்புள்ள புதியதாக பதிவு செய்யப்பட்ட BMW பைக்கை நடிகர் கார்த்தி பரிசாக வழங்கினார்.
‘தேவ்’ படத்தை புதுமுக இயக்குநர் ரஜாத் ரவிசங்கர் இயக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ்-ன் எஸ்.லக்ஷ்மன் தயாரித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், பிரகாஷ் ராஜ், ரம்யாகிருஷ்ணன், அம்ரிதா, RJ விக்னேஷ்காந்த் மற்றும் இன்னும் சில பிரபலங்களும் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.