தேசிங்கு ராஜா 2 விமர்சனம்

இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி. ரவிச்சந்திரன் தயாரிப்பில், எழில் இயக்கத்தில், விமல், ஜனா, பூஜிதா பொன்னாடா, ஜூலி, ஹர்ஷிதா, ஆர்.வி. உதயகுமார், சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், வையாபுரி. மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து, விஜய் டிவி புகழ், விஜய் டிவி கோதண்டம் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தேசிங்கு ராஜா 2. 

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் விமல், தப்பு செய்யும் குற்றவாளிகளுக்கு  துணையாக இருப்பது, லஞ்சம் வாங்குவது‌ என்று இருந்து வருகிறார்.

பக்கத்து ஏரியாவின் போலீஸ் அதிகாரியாக புகழ் இருக்கிறார் விமலுக்கும் புகழுக்கும் இடையே மோதல் வந்து கொண்டே இருக்கிறது.

பிரபல ரவுடியான மார்க்கேட் ராஜா கொல்லப்பட்டு தலை மட்டும் காணாமல் போகிறது. 

அந்த தலையை தேடி புகழுக்கும் விமலுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.  

இப்படி இருக்கையில், அமைச்சர் ரவி மரியாவின் மகனை கொலை செய்ய இறங்குகிறார் தாதாவின் கையாலாக இருக்கும் ஜனா.

விமலின் கல்லூரி தோழியான பூஜிதா பொன்னடா போலீஸ் உதவி கமிஷ்னராக வருகிறார். அமைச்சர் மகனை பாதுகாக்கும் பொறுப்பு பூஜிதாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. ‌விமல் தலைமையில் பாதுகாப்பு குழுவை  நியமிக்கிறார் பூஜிதா. 

அதே நேரம் ரவிமரியாவிற்கு கட்சிக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. தலைவர் மற்றும் பிற அரசியல்வாதிகள் ரிசார்ட்டில் உல்லாசமாக இருந்த வீடியோ ரவி மரியாவிடம் இருக்கிறது. அதனை ரவி மரியா வங்கியில் உள்ள லாக்கரில் வைத்திருந்தார். அந்த லாக்கர் வங்கியில் இருந்து திருடப்பட்டு வருகிறது. 

அந்த வீடியோ வெளியே வந்தால் ரவிமரியா பதவி பறி போகும் நிலை ஏற்படும் என்ற பயத்தில் தேட தொடங்குகிறார். 

இதற்காக விமலுடன் சேர்ந்து அந்த திருடர்களை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். 

கடைசியில் அந்த வீடியோ இருந்த லாக்கரை கண்டுபிடித்தார்களா? இல்லையா ரவி மரியாவின் மகனை ஜனா கொலை செய்தாரா? இல்லையா? மார்க்கெட் ராஜாவின் தலையை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே தேசிங்குராஜா 2 படத்தோட மீதி கதை. 

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை : வித்யாசாகர்

ஒளிப்பதிவு : செல்வா.ஆர்

வசனம் : முருகன்

எடிட்டிங் : ஆனந்த் லிங்கா குமார்

இணை தயாரிப்பு : ஆர் பாலகுமார்

சண்டை : ஃபயர் கார்த்திக்

நடனம் : தினேஷ், பிருந்தா

பாடல்கள் : யுகபாரதி, விவேக், சுப்ரமணியம்

மக்கள் தொடர்பு : ஜான்சன்