BTG யுனிவர்சல், ஞானமுத்து பட்டரை, ஒயிட்நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில், பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்ரமணியன், ஆர்.சி.ராஜ்குமார் தயாரிப்பில், அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆண்டி ஜாஸ் கெலைனன், டிசெரிங் டோர்ஜி, அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், சர்ஜனோ காலிட் ஆகியோர் நடிப்பில் ரெட் செண்ட் வெளியிட்டுள்ள படம் டிமான்டி காலணி 2.
படத்தின் முதல் காட்சியிலேயே அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் சிலர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விடுகிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் பிரியா பவானி சங்கரின் கணவர் தூக்கில் தொங்கி இறந்து விடுகிறார்.
ஆறு வருடம் கழித்து தனது கணவரின் ஆசைப்படி ஒரு ரெஸ்டாரண்டை திறக்கிறார் பிரியா பவானி சங்கர், அப்போது நடக்கும் சில விஷயங்கள் மூலம் தனது கணவரின் ஆவி தன்னுடன் பேச நினைப்பதாக நினைக்கிறார்.
அதற்காக ஒரு சாமியாரின் உதவியுடன் கணவரின் ஆவியுடன் பேச முயற்சி செய்கிறார் பிரியா பவானி சங்கர்.
அப்படி முயற்சி செய்யும்போது அங்கு வேறொருவரின் உயிர் போகும் நிலையில் அந்த ஆன்மா போராடிக் கொண்டிருப்பது பிரிய பவானிசங்கருக்கு தெரிய வருகிறது அதனால் அந்த ஆன்மாவுக்கு உதவி செய்ய நினைக்கிறார்.
அந்த ஆன்மா தான் முதல் பாகத்தில் இறந்து போனதாக நினைத்த அருள்நிதியின் ஆவி.
அருள்நிதியின் ஆன்மாவை மீட்டு, அவரை காப்பாற்றினாலும் அருள்நிதி கோமாவிற்கு சென்று விடுகிறார்.
அருள்நிதி இரட்டையர்களாக வருகின்றனர். அண்ணன் அருள்நிதி தனது தந்தையின் பல கோடி தனக்கே வேண்டும் என்று நினைத்து தம்பி அருள்நிதியை கொல்ல நினைக்கிறார்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் தம்பி இறந்தால் நீயும் இறந்து விடுவாய் என்று பிரியா பவானி சங்கர் கூறுகிறார்.
அதனால் தனது உயிருக்கு பயந்து தம்பியை காப்பாற்ற நினைக்கிறார் அண்ணன் அருள்நிதி. ஆனால் காப்பாற்ற முடியாமல் பலவித அமானுஷ்யங்கள் நடைபெறுகிறது. அவற்றை எல்லாம் சமாளித்து பிரியா பவானி சங்கரும், அருள்நிதியும் தம்பி அருள்நிதியை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதை டிமான்டி காலனி 2 படத்தின் மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : அஜய் ஆர் ஞானமுத்து
எழுத்தாளர்கள் : அஜய் ஆர் ஞானமுத்து, வெங்கடேஷ், ராஜவேல்
ஒளிப்பதிவு : ஹரிஷ் கண்ணன்
இசை : சாம் சிஎஸ்
எடிட்டர் : குமரேஷ் டி
பேனர் : பிடிஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டரை, ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பு : பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்ரமணியன், ஆர்.சி.ராஜ்குமார்
வெளியீடு : ரெட் ஜெயண்ட் வெளியீடு
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, யுவராஜ்