கோவில்பட்டியில் சாலையை சீரமைக்க கோரி வாழைக்கன்றுகள் மற்றும் தென்னங்கன்றுகளுடன் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்டது கிழக்கு மற்றும் மேற்கு பார்க் சாலை.. கோவில்பட்டி நகருக்குள் வரும் அனைத்து பேருந்துகளும் , தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்ககளும் செல்ல பயன்படுத்தக்கூடிய சாலை இந்த சாலைகள் தான், மேலும் வ.வு.சி.நகர், வெங்கடேஸ்நகர், வீரவாஞ்சி நகர் பகுதி மக்களின் பிரதனா சாலைகள் இவை தான் மேலும் இந்த பகுதியில் 5க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளி மாணவ- மாணவிகள் பயன்படுத்தகூடிய சாலைகளாக இந்த சாலைகள் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து, சேதமடைந்து காணப்படும் பார்க் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமின்றி, பயன்படுத்த முடியாத சாலைகளாக உள்ளன. இந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து நகராட்சி நிர்வாகம் 2வது குடிநீர் திட்டத்தினை காரணமாக கூறி சீரமைக்கமால் உள்ளனர். உயிர்பலி வாங்க தயராக உள்ள பார்க் சாலைகளை சீரமைக்க வலியுறுதி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நகரஎதலைவர் ராஜகோபால் தலைமையில் பயணியர் விடுதி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மரக்கன்றுகளை நடும் அளவிற்கு சாலைகளில் பள்ளங்கள் உள்ளதாக கூறி கையில் வாழைக்கன்றுகள் மற்றும் தென்னங்கன்றுகளுடன் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.