கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலைகள் முறையான பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதாகவும், கடம்பூர் பொதுமக்களை தூத்துக்குடி செல்வதற்கு பயன்படுத்தும் சாலையை ரயில்வே துறையினர் மறித்து தடுப்புகளை அமைத்து ஊரை சுற்றி செல்லும்படி கூறுவதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக பல முறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்து கடம்பூர் ரெயில்வே நிலையம் அருகே அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். மார்க்சிய கம்பூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா அர்சுனன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளைவலியுறுத்தி ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.