அடிப்படை வசதிகள் கோரி பகத்சிங் மன்றத்தினர் கோவில்பட்டி அருகே கண்டன ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு ஊராட்சிக்குட்பட்ட கணேஷ் நகர், துளசிங்க நகர், இந்திரா காலனி உள்ளிட்ட பகுதியில் வீடுகட்டி குடியிருக்கும் அனைத்து மக்களுக்கு நத்தம் பட்டா வழங்க வேண்டும், மேலும் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு புதிய தெருவிளக்கு, சாலை வசதி, வாறுகால் வசதி, குடிதண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கணேஷ் நகரில் பகத்சிங் மன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்டோ தொழிற் சங்க தாலூகா செயலாளர் கொம்பையா தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி தலைவர் சீத்தராமன் ஆர்ப்பாட்டத்தினை தொடங்கி வைத்தார். பகத்சிங் மன்ற மாவட்ட தலைவர் உத்தண்டுராமன் கண்டன ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.