காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைதலைவர் ராகுல் காந்தி நேற்று குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற போது அவருடை கார் தாக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல்காந்தி கார் தாக்கப்பட்டதற்கு கண்டித்தும், பிரதமா மோடியை கைது செய்ய வேண்டும், குஜராத் அரசினை கலைக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டி.எஸ்.பி.அலுவலகம் அருகேயுள்ள காவல்துறைக்கு சொந்தமான 200 அடி உயரம் கொண்ட டவரில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.