தீபாவளி போனஸ் விமர்சனம்

ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில், தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த், ரித்விகா, மாஸ்டர் ஹரிஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’.

மதுரை மாவட்டத்தில் இருக்கும் நிலையூர் கிராமத்தில் மனைவி ரித்விகா மற்றும் மகனோடு வாழ்ந்து வரும் நாயகன் விக்ராந்த், கொரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி செய்பவராக வேலை செய்கிறார்.

தீபாவளியை கொண்டாட எல்லோரும் சந்தோஷமாக தயாரகிக் கொண்டிருக்கும் நேரத்தில், தன் மகனோட நீண்ட நாள் ஆசையான போலீஸ் உடை, மனைவி விரும்பிய சேலை, பட்டாசு, பலகாரத்திற்கான செலவு என்று யோசிக்கும் விக்ராந்த், அதற்காக தன்னுடைய நிறுவனத்தின் வழங்கும் தீபாவளி போனஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், அவர் எதிர்பார்த்த மாதிரி நடக்காமல் போக, குடும்பத்தின் தேவைக்காக வேறு ஒரு வேலை செய்கிறார் ஈடுபடுகிறார். அந்த வேலை அவருக்கு எதிர்பாராத ஒரு பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது.

அந்த பிரச்சனையிலிருந்து விக்ராந்த் மீண்டாரா? இல்லையா? தீபாவளியை தன் குடும்பத்தினருடன் கொண்டாடினாரா? இல்லையா? என்பதே தீபாவளி போனஸ் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை : மரியா ஜெரால்ட்
ஒளிப்பதிவு : கௌதம் சேதுராம் படத்தொகுப்பு : பார்த்திவ் முருகன்
நடனம் : நிசார் கான்
வெளியீடு : ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ்
மக்கள் தொடர்பு : தர்மா, சுரேஷ்