கவர்னர் ஆவார் பேரரசு டீல் பட விழாவில் மன்சூர் அலிகான்

“டீல்” DEAL படவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகானும், இயக்குனர் பேரரசும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட போது, மன்சூர் அலிகான் இயக்குனர் பேரரசை பார்த்து, நீங்க பிஜேபி’யில் இருக்கும் பெரிய புள்ளி. ‘சொல்ல முடியாது உங்க கட்சி உங்களை கவர்னர் ஆக்கினாலும் ஆக்கும்’ என்று கலாய்த்தார். அதற்கு பேரரசு, ஆமாம் எங்கள் கட்சி அனைவருக்கும் அங்கீகாரம் கொடுக்கும் என்றார்.

மலையாள இயக்குனர் இசையமைத்து, இயக்கும் நேரடி தமிழ் படம் “டீல்” DEAL

இயக்குனர் பேரரசு, நடிகர்கள் மன்சூர் அலிகான், சாம்ஸ், முத்துக்காளை, சிஸ்சர் மனோகர், காதல் சுகுமார், வைகாசி ரவி, நடிகைகள் கிருஷ்ணா தேவி, காதல் மல்லி, அகல்யா, சுதா ஆகியோர் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற “டீல்” பட தொடக்க விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

உழைக்காமல் சம்பாதித்து உயர நினைக்கும் ஒருவருக்கும், உழைத்து சம்பாதித்து உயர நினைக்கும் மற்றொருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் “டீல்” DEAL படத்தின் கதை.

டுவென்டி புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் கதை எழுதி, இசையமைத்து, தயாரித்து, சுனீ சேகர் இயக்குகிறார். சி.பாலசுப்பிரமணியன் இணை இயக்கம் செய்கிறார்.

அதர்வா பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஷான்வி கதாநாயகியாக நடிக்கிறார். சாம்ஸ் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். எஸ்.கிஷோர், சுதா, பிரவ் மோகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஷந்து மேப்பயூர் ஒளிப்பதிவை கையாளுகிறார். பி.சி.மோஹனன் எடிட்டிங் செய்கிறார். எம்.எல்.ஆனந்த் நடனம் அமைக்க, ஜாக்கி ஜான்சன் சண்டைப் பயிற்சி அளிக்கிறார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். நிர்வாக தயாரிப்பை எஸ்.கிஷோர் மேற்கொள்கிறார்.

“டீல்” DEAL படத்தை இயக்கும் சுனீ சேகர் மலையாளத்தில் நொம்பரம், கிருஷ்ண யேட்சா, பென் மசாலா ஆகிய படங்களை இயக்கி, கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் விருதுகள் பெற்றுள்ளார்.

“டீல்” DEAL திரைப்படம் காமெடி, அடிதடி கலந்து, ஜனரஞ்சகமான படமாக தயாராகிறது.

PRO_கோவிந்தராஜ்