‘டெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்திற்கான இந்திய முன்பதிவு நாளை ஒரு நாள் (ஜூன் 8-ம் தேதி) துவங்குகிறது


இந்திய ரசிகர்களுக்கு இந்த நண்பர்கள் தினம் மிகவும் சிறப்பானதாக ‘டெட்பூல் & வால்வரி’னோடு அமைய இருக்கிறது. ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்ற பிறகு மார்வெல் ஸ்டுடியோஸ் டெட்பூல் & வால்வரின் ஐமேக்ஸ் அட்வான்ஸ் புக்கிங்கை  நாளை (ஜூன் 8) ஒரு நாள் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

கோடைக்கால கொண்டாட்டமாக ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் படம்  திரையிடப்பட இருக்கிறது. படத்தில் இருந்து வெளியான முதல் டிரெய்லர், வெளியான 24 மணி நேரத்திலேயே ஆன்லைனில் 365 மில்லியன் முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. இரண்டாவது டிரெய்லர் இந்த வாரம் வெளியாகி முந்திய சாதனையை முறியடித்துள்ளது.

இது LFGக்கான நேரம்!

மார்வெல் ஸ்டுடியோஸின் ஐக்கானிக் சூப்பர் ஹீரோ டெட்பூல் மற்றும் வால்வரின் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூலை 26 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.