தாவூத் விமர்சனம்

அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில், லிங்கா, சாரா ஆச்சர், திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தாவூத்.

மும்பையிலேயே இருந்து கொண்டு தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தும் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் தாவூத். தாவத்தைப் பற்றி எந்த ஒரு விவரமும் உலகிற்கு தெரியாமல் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து கடத்தவிருக்கும் போதே பொருளை கைப்பற்றும் முயற்சியில் காவல்துறையில் இருக்கும் அஜய் குழு ஈடுபடுகிறது. 

20 வருடங்களாக தாவூத்திற்காக கடத்தல் பணிகளை செய்து வந்த தீனா தாவூத்தின் சரக்கை கைப்பற்றுவதற்கு ஒருபுறம் திட்டம் திட்டுகிறார். 

இது மட்டுமல்லாமல் மற்றொருபுறம் தாவூத்யின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கிறது மற்றொரு தரப்பு. 

இந்த சூழ்நிலையில் சரியான இடத்தில் தாவூத்தின் சரக்கை கொண்டு சேர்க்கும் பணி அபிஷேகிடம் ஒப்படைக்கப்படுகிறது. எப்பொழுதும் செய்து வரும் ஆட்கள் மூலம் அதனை செய்தால் தெரிந்து விடும் என்று புதிய நபரை தேர்ந்தெடுக்கிறார். அதற்காக வாடகை கார் ஓட்டுனர் ஆக இருக்கும் லிங்காவிடம் அந்தப் பணியை ஒப்படைக்கிறார். 

திட்டமிட்டபடி லிங்கா தாவூத்தின் சரக்கை பத்திரமாக சேர்த்தாரா? இல்லையா? வெளி உலகத்திற்கு தெரியாத தாவூத் வெளியில் வந்தாரா? இல்லையா? என்பதே தாவூத் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : TURM  புரொடக்ஷன் ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் S. உமா மகேஸ்வரி

இயக்கம் : பிரசாந்த் ராமன்

ஒளிப்பதிவு :  சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த். 

இசை : ராக்கேஷ் அம்பிகாபதி 

பாடல்கள் : அருண் பாரதி  

எடிட்டிங் : R. K. ஸ்ரீநாத்  

கலை :  ஜெய் முருகன்

நடனம் : ஸ்ரீக்ரிஷ் 

மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்