மதுரை அடங்காத காளையாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் “செவல காள”

 

விங்ஸ் பிக்சர்ஸ் புதிய பட நிறுவனம் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கும் படம் “செவல காள”.
மதுரையைக் களமாகக் கொண்டு படம் வளர்ந்து வருகிறது.

இப்படத்தை கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி வருகிறார் பால் சதீஷ். யாரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் குறும்படங்கள் இயக்கி இன்று சாதனைபடைத்து வரும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வரிசையில் இவரும் குறும்படங்கள் இயக்கி,
பின் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் மதுரை மேலூரில் ஆரம்பமானது.

தனக்கு தவறு என்று பட்டால் அதை யார் செய்தாலும் அவர்களைத் தண்டிக்கத் தயங்காதவன் நாயகன். மதுரை அருகே ஒரு கிராமத்தில் வாழும் நாயகனின் அண்ணனை, ஊரையே தனதாக்கி தன் கட்டுப்பாட்டில் வைக்கும் ஊர் பெரிய பணக்காரர் அவமானப் படுத்த.. நாயகனான தம்பி களம் இறங்க.. அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான காட்சிகள் தான் இந்த படம் .

வெளியூரில் இருந்து கிராத்துக்கு வரும் நாயகி..ஆரம்பத்தில் நாயகனின் முரட்டுத்தனத்தை பார்த்து பயந்தாலும்…
அவனது குணத்தை அறிந்து அவனைக்காதலிக்க, அதற்கு எதிர்ப்பு எழ…
நாயகன் வில்லனின் திட்டங்களை முறியடித்தாரா…?
தன் காதலில் வெற்றி அடைந்தாரா…??
என்ற கேள்விகளுக்கு ஆக்‌ஷ்ன், காதல்,நகைச்சுவை, சென்டிமென்ட் ஆகிய அம்சங்களுடன் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இப் படத்தை டைரக்ட் செய்துள்ளார் புது இயக்குநர் பால் சதீஷ்.

இதில் முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர்
ராபர்ட் நடிக்கிறார். அண்ணனாக ஆரியன், ஊர் பணக்காரராக சம்பத் ராம், நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு : R.ராஜாமணி,
இசை : ப்ரித்வி,
பாடகர்கள்: சங்கர் மாகாதேவன்,
அனுராதா ஶ்ரீராம்,பிரன்னா,வேல்முருகன் & முகேஷ்.
பாடல்கள்: சீர்காழி சிற்பி,
எடிட்டிங்: S.B.பிரான்சிஸ் – நிவேக் சுந்தர்
நடனம்: ஆண்டனி, ராபர்ட், சிவாஜி & வினோத்,
ஸ்டண்ட்: ஸ்பியர்ஸ் சதீஷ்
இணை இயக்குநர்: K.V.பாலன்,
ஸ்டில்ஸ்: R.மனோ,
PRO: ஜான்சன்,
தயாரிப்பு நிர்வாகம்: மரிய மெசியா,
போஸ்ட் புரொடக்‌ஷன்: graphic waves – நிவேக் சுந்தர்
தயாரிப்பு: விங்ஸ் பிக்சர்ஸ்,
தயாரிப்பாளர்: பால் சதீஷ் – ஜூலி

மதுரையை மேலூர், ஒத்தக்கடை, புது தாமரைப்பட்டி, இலங்கிப்பட்டி ஆகிய ஊர்களில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

Productions : Wings Pictures
Producer: Paul Sathish – Julie

Writer- Director : Paul Sathish
Cinematographer : Rajamani. R
Music Director : Prithivy
Singer’s:
Shankar Mahadevan
Anuradha Sriram
Prasanna
Velmurugan
mugesh
Lyricist : Sirkali Sirpi
Editor: SB. Francis – nivek sundar
Choreographer : Antony, Robert Master, Sivaji, Vinoth
Stunts :Spears சதீஷ்
Co. Director: KV BALAN
Stils : R. Mano
PRO : Johnson
Production Manager : Maria Mesia
Post Production : graphic waves – Nivek Sundar.