வங்கிகளுக்கு ஒவொவொரு மாதத்திலும் 2வது சனி மற்றும் 4வது சனிகிழமைகளில் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 2 முறை தொடர் விடுமுறை தினங்களாக வருகிறது. .அதில் கூடுதலாக பண்டிகை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை என்று தொடர் விடுமுறைகளை தொடர்ச்சியாக வருகிறது.
அதாவது வருகிற 12ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14ஆம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 15ஆம் தேதி செவ்வாய்க் கிழமை சுதந்திர தினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. மீண்டும் அதை தொடர்ந்து 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி, 26ஆம் தேதி 4வது சனிக்கிழமை, 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள்.
இவ்வாறு வங்கிகளுக்கு இந்த மாதத்தில் தொடர் விடுமுறை வருவதால் முன்கூட்டியே தேவையான அளவுக்கு பணத்தை எடுத்துக்கொள்வது நல்லது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.