போயஸ்கார்டனில் இருந்து சசிகலாவை வெளியேற்ற வேண்டும் என கமிஷனரிடம் புகார்

போயஸ்கார்டன் வீட்டில் தங்கியுள்ள சசிகலாவை வெளியேற்ற வேண்டும் என வழக்கறிஞர் கலாதேவி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் மன்னார்குடி கும்பல் பீதியடைந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை மன்னார்குடி கும்பல் கைப்பற்றியது. இதற்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லாம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என அறிவித்தார். இதையடுத்து வேதா இல்லத்தை ஜெயலலிதா இளவரசி பெயரில் உயில் எழுதி வைத்து விட்டதாக மன்னார்குடி கும்பல் புதிய கதையை கிளப்பியது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கலாதேவி சென்னை மாநகர கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார். அதில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் இருந்து சசிகலாவை வெளியேற்ற வேண்டும் என கலாதேவி கூறியுள்ளார். மன்னார்குடி கும்பலுக்கு அடி மேல் அடி விழுவதால் செய்வதறியாது திணறி வருகின்றனர்.