நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி உள்பட 4 பேர் மீது, சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யிடம் நடிகர் சங்கம் சார்பில் புகார் அளித்துள்ளார் பொதுச் செயலாளர் விஷால். தன்னுடைய புகாரில், காஞ்சிபுரம் அருகே வேடமங்களம் கிராமத்தில் உள்ள நடிகர் சங்க சொத்தை அபகரித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ரூ.1.50 கோடி மதிப்பிலான அந்த சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அவர்கள் அபகரித்து உள்ளதாகவும் விஷால் தனது புகாரில் தெரிவித்து இருக்கிறார்.