சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது புகார்

D- 16

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் நிலவேம்பு கசாயம் குறித்து எதிர்மறையான கருத்து தெரிவித்ததாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பெரம்பூரை சேர்ந்த தேவராஜ் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். 

இந்த புகார் மனுவானது சைபர் கிரைம் போலீசாருக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. நிலவேம்பு குறித்து நடிகர் கமல் தனது ட்விட்டரில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.