கோல்கேட் ஆக்டிவ் சால்ட் பற்பசை அட்டையின் உட்புறத்தில் திருக்குறளை உத்வேகமாகக் கொண்ட கதைகள் அச்சடிக்கப்பட்ட சிறப்புப்-பதிப்புகோல்கேட் ஆக்டிவ் சால்ட் பேக்குகளைஅறிமுகம் செய்துள்ளது
தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு பயணம் செய்யவுள்ள “வள்ளுவரின் குறளைப்போற்றும் வாகனம்” என்னும் திருவள்ளுவர் போற்றி; டிரக்கின் பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்துள்ளது.
வாய் பராமரிப்பு பிரிவில் சந்தையில் தலைமைத்துவநிலையில் வீற்றிருக்கும் கோல்கேட்-பால்மோலிவ் (இந்தியா) லிமிடெட் தமிழ்நாட்டில் கோல்கேட் ஆக்டிவ் சால்ட் பற்பசையின் சிறப்பு லிமிடெட்-எடிஷன் பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. உள்ளுர் கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் கார்ட்டனின் உட்புறத்தில் பல்வேறு திருக்குறள்-அடிப்படையிலான கதைகள் அச்சடிக்கப்பட்டு இந்த பேக்குகள் வெளிவருகின்றன.
நகரில் இன்று நடைபெற்றதொரு ஊடக நிகழ்வில் புதிய கோல்கேட் ஆக்டிவ் சால்ட் பேக் காட்சிப் படுத்தப்பட்டது. இந்நிகழ்வு கலாச்சார பாரம்பரியம் மற்றும் திருக்குறளின் முக்கியத்துவம் ஆகியவைகள் குறித்து பிரபல பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், சுகிசிவம், பட்டிமன்றம் ராஜா மற்றும் கோல்கேட்-பால்மோலிவ் (இந்தியா) லிமிடெட் வாடிக்கையாளர் மேம்பாடு பிரிவின் செயல் துணைத் தலைவர் திரு.ஆ.சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்று நிகழ்த்திய உரைகளுடன் துவங்கியது.
இந்நிகழ்விற்குப் பிறகு திருவள்ளுவரின் திருக்குறள்களைக் கொண்டாடும் வகையில் வாகனத்தின் பயணம் அந்த இடத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. கோல்கேட் வழங்கும் வள்ளுவரின் குறளை போற்றும் வாகனம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தவாகனம் தமிழ்நாட்டின் பத்து முன்னணி நகரங்களை (வேலூர், பாண்டிச்சேரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி) கடந்து பயணித்து 20 நாட்கள் கழித்து திருவள்ளுவரின் பிரபலமான நினைவுச் சின்னம் அமைந்துள்ள கன்னியாகுமரியை சென்றடையும்.
திருக்குறள் குறித்த எளிமையான கேள்விகளுக்கு விடையளிப்பதன் வழியாக ஒவ்வொரு அமைவிடத்திலும் நுகர்வோருக்கு இலவச CAS திருவள்ளுவர் பேக் (மிகச் சிறந்த தத்துவஞானியின் கற்பித்தல்களை பரப்புவதற்கான மற்றும் இளம் தலைமுறையினருக்கு நன்னெறிகள் குறித்தொரு எளிமையான வழிகாட்டுதலை வழங்குவதற்கானதொரு சிறிய முயற்சி) வெல்லும் வாய்ப்பு வழங்கப்படும்.
கோல்கேட்-பால்மோலிவ் (இந்தியா) லிமிடெட் வாடிக்கையாளர் மேம்பாடு பிரிவின் செயல் துணைத் தலைவர் திரு.ஆ.சந்திரசேகர் பேசுகையில்; “எங்கள் நுகர்வோரது வாழ்வில் மதிப்பினை சேர்க்கத்தக்க வழங்குதல்களை மட்டுமே அளிக்கும் வகையில் அவர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருப்பதை நாங்கள் கோல்கேட்டில் விரும்புகிறோம்.
அதற்காக எங்களது தமிழ் நுகர்வோர்களை சந்தித்ததில் தங்களது கலாச்சாரத்தின் மீது அவர்கள் உறுதியான பெருமையைக் கொண்டுள்ளதையும் மற்றும் அவற்றை தங்களது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதை முன்னுரிமையாகக் கொண்டுள்ளதையும் அறிந்து கொண்டோம்.
அதன் அடிப்படையிலேயே திருக்குறள் கதைகள் கொண்ட இந்தகோல்கேட் ஆக்டிவ் சால்ட்பேக் சிறப்பு பதிப்பை வடிவமைத்துள்ளோம். அது புதியதலை முறையினருக்கு திருவள்ளுவரின் அறிவுச் செல்வங்களை இன்னும் சற்று நெருக்கமாக கொண்டு செல்லும் ஒரு சிறிய அளவிலான முயற்சியே ஆகும்”என்று கூறினார்.
கோல்கேட் ஆக்டிவ் சால்ட் தமிழ்நாட்டின் நம்பர் 1 பற்பசை பிராண்டாகும். புதியகோல்கேட் ஆக்டிவ் சால்ட் பேக்குகள்
பல்வேறு ரீடெயல் வடிவாக்கங்களில் ஒரு பேக் ரூ.10 முதல் ரூ.90 வரையிலான சேவர் பேக்குகளாக கிடைக்கப் பெறுகிறது.
இச்சிறப்புப் பதிப்பு பேக்குகள் மே 2018 வரை கிடைக்கப் பெறும். உப்பின் நற்பண்புகளுடன் குடும்பம் முழுவதும் பயன்படுத்துவதற்கான தினசரி பயன்பாட்டிற்கான பற்பசை தயாரிப்பாக இந்தியாவில் கோல்கேட் ஆக்டிவ் சால்ட் 2005 – ன் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தனித்துவமிக்க ஃபார்முலா கிருமிகளை எதிர்க்கிறது ஈறுகளை மற்றும் பற்களை உறுதியாக்குகிறது. இதன் மின்ட் சுவை தனித்துவமிக்க பல் துலக்கல் அனுபவத்தை அளிக்கிறது.