யோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’

PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்குகிறார். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, இவர்களுடன் சாயாஜி ஷிண்டே  காமெடி கலந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடிக்கிறார். 
மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக  ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா குரேஷி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “காக்டெயில்” என்கிற பறவையும் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.
இந்திய சினிமாவில் முதன் முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்த படத்தில் யோகி பாபு நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்.
யோகி பாபுவும் அவரது நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறார்கள்.. 
கொலையானது யார்??  அந்த கொலையை செய்தது யார்???
இதிலிருந்து மீண்டு யோகிபாபு அண்ட் கோ  எப்படி வெளியே வருகிறார்கள்?? 
இதில்  பறவையின் பங்கு என்ன என்பதுதான் படத்தின் கதை. 
இடைவேளைக்குப் பின்பு கிட்டத்தட்ட ஒரு கார் பயணமாகவே இக்கதை விறுவிறுப்பாக நகரும். 
ஜி.வி.பிரகாஷிடம் பணிபுரிந்த சாய் பாஸ்கர் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். 
பி.ஜி.முத்தையாவின் சிஷ்யரான ரவீண் ஒளிப்பதிவு செய்கிறார்.
எடிட் செய்கிறார் எஸ். என். பாசில்.
சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் வடிவமைக்கிறார்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர். 
இரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளது “காக்டெய்ல்” குழு.