கோப்ரா விமர்சனம் 3.5/5

பல கெட்டப்புகளில் வரும் விக்ரம், முதலமைச்சர், ஸ்காட்லாந்து அரசர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களை கொலை செய்கிறார். இந்த கொலைகள் பற்றி விசாரிக்க வரும் இண்டர்போல் ஆபிஸராக இர்பான் பதான், அவர், கொலையாளி ஒரு கணித மேதாவி என்பதை கண்டுபிடிப்பதோடு, அப்படியே குற்றவாளியை பிடிக்க முயற்சி செய்கிறார். விக்ரமை போலீஸிடம் காட்டிக்கொடுப்பதற்காக ஹேக்கர் ஒருவர் இண்டர்போலுக்கு அடிக்கடி தகவல் கொடுக்கிறார், அதன் மூலம் விக்ரம் பிடிபட்டாரா? இல்லையா?, அவர் எதற்காக இத்தனை கொலைகள் செய்கிறார்? விக்ரமை காட்டி கொடுக்கும் அந்த ஹேக்கர் யார்? என்பதை விறுவிறுப்பாக, சொல்லியிருப்பது தான் ‘கோப்ரா’ படத்தின் மீதிக்கதை.

நடிகை-நடிகர்கள்:

விக்ரம், இர்பான் பதான், ஸ்ரீநிதி, மிரணலினி, மீனாக்‌ஷி, ரோபோ சங்கர் மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

இயக்கம் : அஜய் ஞானமுத்து
இசை : ஏ.ஆர் ரகுமான்
ஒளிப்பதிவு : புவன் ஸ்ரீனிவாசன்
தயாரிப்பு : லலித் குமார்