அறிவுத்திறன் மற்றும் தற்காப்பு கலைகள் திறன் கொண்ட அர்ஜூன் எனும் கிராமத்து இளைஞர் கலைத்துறையில் சிறந்து விளங்கவேண்டும் என்ற ஆவலுடன் நகருக்கு வருகிறார். இளம்பெண் தொழிலதிபரான சித்ரா எனும் தன் உறவுக்கார பெண் தயாரிக்கும் விளம்பர படங்களில் நடிக்கிறார். இந்த வர்த்தக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு முறைகேடுகள் செய்கிறார்கள். சித்ராவையும் தீர்த்து கட்ட முடிவு செய்கிறார்கள். இதையெல்லாம் அர்ஜூன் எதிர்கொண்டு எவ்வாறு தீர்வு காண்கிறார் என்பதே கதை என்கிறார் இயக்குனர்.
விசுவல் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார் ராம்குமார்.
ராம்குமாருடன் பிரீத்தி கதாநாயகியாக நடிக்கிறார்.விமலா, கே.பி.கணேஷ்குமார், ரவி, மணி, குமரேஷ்பாபு ஆகியோரும் நடத்திருக்கின்றார்கள்.
ஒளிப்பதிவு – சுதன்
இசை – எம்.எஸ்.தியாகு
பாடல்கள்- ராம்குமார், அனீஷ்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் –
ராம்குமார்
5 பாடல்களும்
4 சண்டைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
மதுரை கொடைக்கானல், தேனி, திருச்செந்தூர் போன்ற இடங்களில் 45 நாட்களில் நடைபெற்று முடிவடைந்தது.