இளம் தலைமுறை பாடலாசிரியர்களில் தனக்கென தனி அடையாளத்துடன் முன்னனி திரைப்படங்களில் பாடல்கள் எழுதி வருபவர் பாடலாசிரியர் கவிஞர் அருண்பாரதி
ரஜினி, அஜித், விஷால், விஜய்ஆண்டனி என முன்னனி நடிகர்களுக்கு பாடல்கள் எழுதி வரும் இவரது சமீபத்திய ஹிட் அண்ணாத்த திரைப்படத்தில் இடம்பெற்ற வா சாமி பாடல்.
இதனைத் தொடர்ந்து நேரடி மலையாள திரைப்படமாக உருவாகி வரும் ப்ரீசர் நம்பர் 18 திரைப்படத்தில் தமிழ் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
இது குறித்து அருண்பாரதி பேசுகையில் …
ரஜினிசாரின் அண்ணாத்த படத்தில் நான் எழுதியிருந்த ” வா சாமி ” பாடலை இவ்வளவு பெரிய வெற்றிப்பாடலாக்கிய ரசிகர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது மாநிலம் கடந்து நம் தமிழ் மொழியின் பெருமையை கொண்டு செல்வதில் நானும் ஒரு கருவியாக இருக்கிறேன் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாடலை ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்துவிட்டேன் , எழுதும் போது இயக்குநர் மனோஜ் கே வர்க்கீஸ், இசையமைப்பாளர் சுனில்குமார் ஆகியோர் வரிகளில் உள்ள சப்தத்தையும் அர்த்தத்தையும் உணர்ந்து வியந்து பாராட்டினார்கள், அதற்கு நான் நீங்கள் பாராட்ட வேண்டியது என்னையல்ல தமிழ் மொழியை என்று அவர்களுக்கு பதிலளித்தேன்.
இக்கதை கேரளம் மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் நடைபெறும் கதையாக இருப்பதால் முழுக்க முழுக்க தமிழிலேயே இப்பாடலை எழுதியுள்ளேன் என்கிறார் புன்னகையுடன்.
இதனைத் தொடர்ந்து அருண்பாரதியின் சூழலியல் குறித்த ” ஈமக்கலயம் ” என்னும் கவிதை கேரள அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு பன்னிரன்டாம் வகுப்பு சிறப்புத்தமிழ் நூலில் மாணவர்களுக்கு பாடத் திட்டமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது ஒரு தமிழ் கவிஞனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றுதான் சொல்லவேண்டும்.