அமெரிக்காவின் செடோனா 29 வது சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரஷ்யா வின் 45 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் இயக்குனர் சீனுராமசாமி எழுதி இயக்கிய மாமனிதன்.
அமெரிக்காவின் அரிசோனா மகாணத்தில் உள்ள செடோனாவில் சர்வதேச சுயாதீன திரைபடங்களுக்கான விருது வழங்கும் செடோனா சர்வதேச திரைப்பட விழா புகழ் பெற்ற ஆஸ்கார் விருது வெற்றியாளர்களால்
1994 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்ற பல படங்கள் இங்கு திரையிடப்பட்டவை.
பிரபல ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெற்று கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 2002 ஆம் ஆண்டு கொலம்பியா ஹைஸ்கூல் மஸாக்கர் என்ற அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் பற்றிய டாக்குமென்டரி படத்துக்கு ஆஸ்கார் விருது பெற்ற மைக்கேல் மூர் அவர்கள் கடந்த 2010 பத்தாம் ஆண்டு இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெற்று கௌரவிக்கப்பட்டார்.
பிப்ரவரி 18 முதல் 26 வரை நடைபெறும் இந்த 29வது செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் இரண்டு முறை பிரீமியர் செய்யப்படுகிறது.
டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
தியேட்டர் வருவாயில் குறைவாக இருந்த போதிலும் ஆகா ஓடிடியில் இப்படம் அடைந்த வெற்றி குறிப்பிடத்தக்கது.
உலகப்படங்களின் நேர்த்தியோடு நவீன யாதார்த்தத்தின் உள்ளீடோடு உருவாகும் வாழ்வியல் உணர்ச்சிகள் நிறைந்த படங்கள் இங்கு மக்களாலும் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
ரஷ்யாவின் புகழ்பெற்ற
மாஸ்கோ 45வது சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘உலகத்திரைப்பட பிரிவில்’ திரையிடவும் அதே சமயம் 29 வருடமாக நடக்கும் செடொனா சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் போட்டிப் பிரிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ‘மாமனிதன்’ படத்தின் திரைக்குழுவின் சார்பில் இம்மாதம் அமெரிக்காவிற்கும் ஏப்ரல் மாதம் ரஷ்யாவின் அழைப்பை ஏற்று
மாஸ்கோ செல்லவிருக்கிறார் சீனு ராமசாமி.