ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் “பிரண்ட்ஷிப் ” படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் . ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் , லாஸ்லியா, சதிஷ் , JSK சதீஷ்குமார், வெங்கட் சுபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .
பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவராக நடிக்கும் ஹர்பஜன் தீவிர ரஜினிகாந்த் ரசிகர் .தற்போது இப்படத்தின் “Superstar anthem” என்ற முதல் பாடலை ராகவா லாரன்ஸ் வெளியிட்டார் .நடிகர் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளார் . அறிமுக இசைஅமைப்பாளர் DM உதயகுமார் இசையமைத்துள்ளார்.
சிம்பு தொலைபேசியில் ஹர்பஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பாடல் சிறப்பாக உருவாகியிருக்கிறது , திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என வாழ்த்தியுள்ளார் .இதற்கு பதிலளித்த ஹர்பஜன் “எனக்கு இப்படத்தின் மூலம் ஒரு நல்ல நண்பனாக கிடைத்துள்ளீர்கள். சென்னையில் நாம் இருவரும் விரைவில் சிந்திப்போம்” என கூறியுள்ளார்.
பிரண்ட்ஷிப் திரைப்படம் இந்திய மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது .
தொழிநுட்பக்குழு :
இயக்கம் – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா
தயாரிப்பு – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா
இணைத்தயாரிப்பு – வேல்முருகன்
ஒளிப்பதிவு – சாந்த குமார்
இசை – DM உதயகுமார்
படத்தொகுப்பு – தீபக் S தவாரக்நாத்
கலை இயக்கம் – மஹேந்திரன்
வசனம் – PS ராஜ்
சவுண்ட் டிசைன் – ஆனந்த் (4Frames)
நடனம் – ஷாம் சூர்யா
ஆடை வடிவமைப்பு – வசந்த்
ஸ்டில்ஸ்- சிவா
நிர்வாக தயாரிப்பு – ரோபின்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்