கோடிக்கணக்கான இளைஞர்களின் இதயங்களில் இடம்பிடித்த திரைக்கலைஞர்களுக்கு தனிப்பாடல்களை உருவாக்கி சமர்ப்பணம் செய்துவருகிறார் ஸ்ரீதர் மாஸ்டர். அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய்க்கு “ரசிகனின் ரசிகன்” என்ற தனிப்பாடலை சமர்ப்பணம் செய்திருந்தார். அந்தப் பாடல் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சமர்ப்பணம் செய்யும் எண்ணத்துடன் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” என்ற தனிப்பாடலை உருவாக்கத் தொடங்கி தற்போது வெற்றிகரமாக அந்தப் படைப்பை எடுத்து முடித்துள்ளார் ஸ்ரீதர் மாஸ்டர்.
கலையை உயிருக்குச் சமமாக நேசிக்கும் மனிதர்களை வயது, சாதி, மதம், பாலினம் போன்ற எந்த பாகுபாடும் பார்க்காமல் திறமையின் அடிப்படையில் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, பல நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களின் உறுதுணையுடன் ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கி உள்ள இந்த தனிப்பாடலுக்காக ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். ஒரு கலைஞனை இவ்வளவு நேசித்து அவருக்காக உழைத்த “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் குழுவினர் தங்களின் இதயபூர்வமான சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.