நடிகரும் தயாரிப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ மதுரை டாக்டர்.சரவணன் அவர்களின் மகன் டாக்டர். S. அம்ரித்குமார், டாக்டர். M.D.சாதூர்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் மெடிக்கல் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,
அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார், நாஞ்சில் சம்பத் போன்ற அரசியல் பிரமுகர்களும்
திரை நட்சத்திரங்களான சூரி, விதார்த், இயக்குனர் பேரரசு,
சோனியா அகர்வால், யாஷிகா ஆனந்த், சஞ்சனா சிங், கடலோர கவிதைகள் ரேகா, சீதா, வனிதா விஜயகுமார், நளினி, அறந்தாங்கி நிஷா,ஷகிலா, அங்காடிதெரு மகேஷ். பிளாக் பாண்டி, ரோபோ சங்கர், சோனா, கூல் சுரேஷ், சிங்கம்புலி, ரமேஷ் கண்ணா, பருத்திவீரன் சரவணன், கஞ்சா கருப்பு மற்றும் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.