பாரதிராஜா .. நவீன சினிமாவின் சாரதி..
அரங்கத்து
அகல் விளக்காக
இருந்த
தமிழ் சினிமாவை ..
கிராமாயணம்
படிக்க வைத்து
நிலவில்
இறக்கி வைத்தவர்..
நீங்களும்
இளையராஜாவும்
அன்பு யென்று
எனை
அழைக்கும் போது,
சுனை நீராய்
நிரம்புகிறேன்..
புரட்சித் தலைவர்
நூற்றாண்டு விழா குழுவில் ..
உங்களோடும்
பாக்கியராஜ்யோடும்
பணி புரிந்தது
குருகுல
நறுமண மகிழ்ச்சி..
காற்றாய்
புகழ் நிலைத்திருக்கட்டும் i
கடலாய்
கற்பனைகள்
பொங்கி வழியட்டும்..
தாகம்
கொண்ட நதியே
சலங்கை கட்டும்
விலை வைக்கப்பட்ட
உங்கள் கார்களோடு ..
விலை மதிப்பில்லா
ஆஸ்காரும் இணைந்து
தமிழகத்திற்கு புகழ் சேர்க்கும்..
ராஜாக்களால்
கலை
புதுசா பூத்த
ரோசாவாக மணக்கிறது
கூழாங்கற்களையும்
சிலையாக்கும்
உங்கள் –
விழி உளி்..
உங்களை
சந்தித்த
சாதராண மனிதனும்..
உறை வாள்
உயர் தர
கலைஞானாகி விடுவான்..
புகழுக்குரியவரை
கடந்து செல்கையில்
தலைகளும்
தன்னிச்சையாக
வணங்கும்.
இப்படிக்கு;
இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்