சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் 2018 தீபாவளி மலர் வெளியீட்டு விழா பிரசாத்லோப்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
விழாவில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தலைவர் பாலேஷ்வர் பேசினார். சங்க செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன் வரவேற்று பேசினார். விழாவில் சங்க செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன் பெறுப்பில் உருவான 2018 தீபாவளி மலரை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பெற்றுக் கொண்டார்.
இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையில் மற்றும் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் முன்னிலையில் நடைப்பெற்ற இவ்விழாவில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தலைவர் பாலேஷ்வர், செயலாளர் ஆர்.எஸ்.கார்த்தி, இணை செயலாளர் அண்ணாதுரை, பொருலாளர் குமார், செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், சேவியர், வின்சன்ட, சுகுமார் மற்றும் முன்னால் தலைவர் மேஜர்தாசன் உட்;பட சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவிpல் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி மலர் மற்றும் தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசி பழனிவேல் மற்றும் பி.ஆர்.ஓ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.