ஏடாகி என்டர்டெயின்மென்ட் – சித்தார்த் தயாரிப்பில், எஸ் யு அருண்குமார் இயக்கத்தில், சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஸ்ரா ஸ்ரீ, எஸ்.ஆஃபியா தஸ்னீம், பாலாஜி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘சித்தா’.
சித்தார்த் தனது இறந்து போன அண்ணன் மகள் சஹஷ்ரா ஶ்ரீயை பாசமாக வளர்க்கிறார். நிமிஷா சஜயனை காதலிக்கிறார். அப்பா இல்லையே என்ற ஏக்கமும், எண்ணமும்ஏற்படாத வகையில் சஹஷ்ரா ஶ்ரீயை பாசமாகவும், பாதுகாப்பாகவும் வளர்க்கிறார் சித்தார்த்.
நண்பனின் அக்கா மகளும் சித்தார்த் மகளும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். நண்பனின் அக்கா மகளிடமும் சித்தார்த் பாசமாக இருக்கிறார். ஒருநாள், சித்தார்த் அருகில் செல்லும் போது அந்த சிறுமி தள்ளிச் செல்கிறாள்.
யாரோ ஒருவன் அந்த சிறுமியிடம் அத்துமீறியதால் அந்த சிறுமி நடுங்கியிருக்க, பழியோ சித்தார்த் மீது விழுகிறது. அதே சமயத்தில், சித்தார்த்தின் மகள் கடத்தப்படுகிறாள்.
சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு பக்கமும் ,போலீஸார் ஒரு பக்கமும் தேடுகிறார்கள். இருந்தும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், காணாமல் போன 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டுபிடிக்கப்படுகிறார். ஆனால், அந்த சடலம் சித்தார்த்தின் மகள் அல்ல என்பது தெரிய வருகிறது. காணாமல் போன சித்தார்த்தின் மகளுக்கு என்ன நடந்தது?, அவரை சித்தார்த் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் சித்தா படத்தின் மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : SU அருண் குமார்
இசை: திபு நினன் தாமஸ் மற்றும் விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு: ஏடாகி என்டர்டெயின்மென்ட் – சித்தார்த்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா D’one