புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பாக குழந்தைகள் தின விழா 14.11.2017 இன்று புதுவை கம்பன் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு நலம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.மு.கந்தசாமி அவர்கள் விழாவினை துவக்கிவைத்து நோக்கவுறையாற்றி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.ஆன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் அதிகாரிகள், ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், குழந்தைகள் மற்றும் தாய்மார்களும் கலந்துகொண்டனர்.