சென்னை கோவிலம்பாக்கத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜாவின் மணி விழா நடக்கிறது. அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வருடன் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசனும் இருந்தனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் நேரில் சென்று ராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழக எதிர்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகனும் உடன் இருந்தார். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பாஜக பிரதிநிதிகள் கலந்து கொண்டு ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.