தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழகத்தில் சுற்றுசூழலை பாதுகாப்பிற்காக சிறப்பான நடவடிக்கைகளை எடுத்த 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. திருவண்ணாமலை, தேனி, நீலகிரி, தர்மபுரி, கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 8 மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது இன்று முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முதல்வர் விருதுகளை அளித்ததோடு பாராட்டும் தெரிவித்துள்ளார்.