சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் விமர்சனம்

மகேஸ்வரன் தேவதாஸ் சின்னத்தம்பி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனிஷ் அஷ்ராப் இயக்கத்தில், வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்”

பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளரோட மகனான வெற்றி தந்தை இறந்த பிறகு அவருடைய வாழ்க்கையை புத்தகமாக எழுதுவதற்காக சென்னைக்கு வருகிறார். 

அங்கு ஷில்பா மஞ்சுநாத் தான் புத்தகத்தை எழுதுகிறார். அவருக்கு உதவியாக இருக்கிறார் வெற்றி.

சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக இருக்கும் தம்பி ராமையா ஒரு திருட்டு கேசில் வெற்றியையும் கிங்ஸ்லியையும் பிடித்து விடுகிறார்.

அதிலிருந்து தம்பி ராமையா உடனே பயணிக்கிறார் வெற்றி. கொலை குற்றத்தை கண்டுபிடிப்பதற்கு தம்பி ராமையாவிற்கு உதவியாக இருந்து வருகிறார். 

அந்த சமயத்தில் இரண்டு பள்ளி மாணவர்களும் ஒரு பெண் ரிப்போர்ட்டரும் ஒரே மாதிரியான முறையில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். 

இந்த கொலைகளை ஒரு சைக்கோ கில்லர் தான் செய்கிறார் என்று தெரிந்து கொள்கிறார் வெற்றி. 

ஏன் இவ்வாறு கொலை செய்கிறார்? இந்த தொடர் கொலைகளுக்கான காரணம் என்ன? யார் அந்த கொலைகாரன்? என்பதை வெற்றி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : அனிஷ் அஷ்ராப் 

இசை : ஏ ஜே ஆர் 

ஒளிப்பதிவு : அரவிந்த்

படத்தொகுப்பு : விஷால் 

தயாரிப்பு : மகேஸ்வரன் தேவதாஸ் & சின்னத்தம்பி ப்ரொடக்ஷன்ஸ்

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்