விக்ரம் ராஜேஷ்வர் & அருண் கேசவ் இருவரின் இயக்கத்தில், வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்த் ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், ஷிஹான் ஹுசைனி, சூர்யா கணபதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்”.
வைபவும் மணிகண்ட ராஜேஷும் திருடர்களாக இருக்கின்றனர். இவர்கள் திருடிவிட்டு போலீசில் மாட்டிக்கொண்டால் இவர்களை வெளியே எடுப்பது லிவிங்ஸ்டன். லிவிங்ஸ்டனின் மகளாக அதுல்யா ரவி.
பிரபல ரவுடியாக இருக்கும் சிஹான் ஹூசைனி லிவிங்ஸ்டனிடம் ஒரு கொள்ளை திட்டத்தை சொல்லி அதனை செய்ய சொல்கிறார்.
லிவிங்ஸ்டனோ நான் செய்யவில்லை என்னிடம் இருக்கும் இரண்டு நபர்களை வைத்து செய்ய வைக்கிறேன் என்று வைபவ் மற்றும் மணிகண்ட ராஜேஷிடம் அந்த வேலையை ஒப்படைக்கிறார்.
அந்தக் கொள்ளை சம்பவத்தின் மூலம் கிடைத்த இரண்டு கோடி ரூபாயை குடிபோதையில் இரண்டு பேரும் தொலைத்து விடுகிறார்கள்.
அந்த பணத்தை திரும்ப ரெடி பண்ணுவதற்காக ஆனந்தராஜ், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, இவர்களுடன் சேர்ந்து ஒரு தனியார் வங்கியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகின்றனர்.
திட்டம் தீட்டிய படி வங்கியை கொள்ளையடித்து பணத்தை எடுத்து சிஹான் ஹூசைனியிடம் கொடுத்தார்களா? இல்லையா? என்பதை காமெடியாக சொல்லி இருக்கும் படமே சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை : டி இமான்
ஒளிப்பதிவு : டிஜோ டோமி
தயாரிப்பாளர் : பாபி பாலச்சந்திரன்
தயாரிப்பு நிறுவனம் : பி. டி. ஜி யுனிவர்சல்
வியூகத் தலைமையாளர் : டாக்டர் மனோஜ் பெனோ
படத்தொகுப்பாளர் : சுரேஷ் A பிரசாத்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது

