மல்லையா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்து, நாட்டை விட்டு தப்பிச் சென்ற விஜய் மல்லையா லண்டனில் சொகுசாக வாழ்ந்து வருகிறார். அவரை நாடு கடத்த மத்திய அரசு முயற்சித்து வரும் வேளையில், அதற்கு எதிராக விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் வழக்கையும் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் விஜய் மல்லையா மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை கடந்த திங்களன்று லண்டன் விரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக, 5,500 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. வங்கிகளில் பெற்ற கடன் தொகையை போலி நிறுவனங்கள் மூலம் எப்படி, வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு அனுப்பினார் உள்ளிட்ட விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளதாக கூறுப்படுகிறது.