லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில், சுபாஸ்கரன் தயாரிப்பில், பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ராவ் ரமேஷ், சுரேஷ் மேனன், விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ரவி மரியா, ஸ்ருஷ்டி டாங்கே, சுபீக்ஷா, சாய் ஐயப்பன், சத்ரூ, கார்த்திக் சீனிவாசன், சி.ரங்கநாதன், தேவி, பாவனா, பேபி மானஸ்வி, மாஸ்டர் சஞ்ஜீவ், மாஸ்டர் தர்சித், பேபி தீக்ஷா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சந்திரமுகி 2.
சொந்த பந்தங்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார் பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த ரங்கநாயகி (ராதிகா சரத்குமார்). அவருடைய முதல் மகள் காதலனுடன் ஓடிப்போய் கலப்பு திருமணம் செய்து கொள்ள கோபப்பட்டு குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைத்து விடுகின்றனர். ஒரு விபத்தின் காரணமாக, மகளும் மருமகனும் இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு இறந்துவிட குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு பாண்டியன் (ராகவா லாரன்ஸ்) ஒப்படைக்கப்படுகிறது.
ரங்கநாயகியின் இரண்டாவது மகள் திவ்யா(லட்சுமி மேனன்) விபத்துக்குள்ளாகி நடக்க முடியாமல் வீல் சேரில் இருக்கும்படி வாழ்க்கை ஆகி விடுகிறது. அதன் பிறகு பல்வேறு, பல விதமான பிரச்சனைகளை சந்தித்து வரும் ரங்கநாயகி குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் குல தெய்வத்துக்கு பெரிய பூஜை செய்ய வேண்டும், என்று குடும்ப ஆன்மீக குருவான (ராவ் ரமேஷ்) அறிவுறுத்துகிறார். அந்த பூஜையில் ரங்கநாயகி வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருக்கும் மகளின் குழந்தைகளையும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் அப்பொழுது தான் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும் என்று சொல்கிறார். அவர்கள் பூஜை செய்ய வேண்டிய குலதெய்வகோவில் வேட்டையன் அரண்மனைக்கு அருகில் உள்ளதால் குடும்பம் வேட்டையபுரம் அரண்மனையில் தங்கி வழிபாடு செய்ய செல்கிறார்கள்.
மகளுக்கு பிறந்த குழந்தைகளையும் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஆன்மீக குரு கூறியதால், அந்தக் குழந்தைகளும் அவர்களது கார்டியன் பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) அரண்மனைக்கு வருகின்றனர். அந்த அரண்மனைக்கு முருகேசன் (வடிவேலு) சொந்தக்காரர் என்பதால் அரண்மனையை ரங்கநாயகியின் குடும்பத்திற்கு லீஸுக்கு விடும் போது சந்திரமுகியின் ஆவி இருப்பதைப் பற்றி அவர்களுக்கு சொல்லாமல் இருக்கிறார். ஆனால் ரங்கநாயகி மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டின் தெற்கு நோக்கி செல்ல வேண்டாம் என்று மட்டும் எச்சரிக்கிறார்.
அந்த வீட்டை குத்தகைக்கு எடுத்து தங்கும் அவர்களை, தங்கள் குலதெய்வக் கோயிலில் பூஜை செய்ய விடாமல் தடுக்கிறது சந்திரமுகி (கங்கனா). இதனை கண்டுபிடிக்க பாண்டியன் களமிறங்குகிறார். அதன் பிறகு அரண்மனையில் பல வினோதமாக சம்பவங்கள் நடக்கின்றன.
பாண்டியன் வேட்டையன் யார், என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடித்தாரா? சந்திரமுகிக்கும் வேட்டையனுக்கும் என்ன பகை? ரங்கநாயகி குடும்பத்தில் வேட்டையன் மற்றும் சந்திரமுகி ஆவி யாரை புகுந்தது? ரங்கநாயகியின் குடும்பம் குலதெய்வம் கோயிலில் பூஜை செய்ததா? இல்லையா? என்பதே சந்திரமுகி 2 படத்தின் மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை : எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவாளர் : ஆர்.டி.ராஜசேகர்
கலை இயக்குனர் : தோட்டா தரணி எடிட்டிங் : ஆண்டனி
பாடலாசிரியர்கள் : யுகபாரதி – மதன் கார்க்கி- விவேக் – சைத்தன்ய பிரசாத் நடன பயிற்சி : கலா, தினேஷ், பாபா பாஸ்கர்
சண்டைப்பயிற்சி : கனல் கண்ணன், ஸ்டண்ட் சிவா, ரவி வர்மா, ஓம் பிரகாஷ்
லைக்கா புரொடக்ஷன்ஸ் தலைமை : ஜி.கே.எம்.தமிழ்குமரன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்