சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் இசைக்கலைஞராக “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்

சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கின்றார்.
பேரான்மை, புறம் போக்கு படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் இப்படத்திற்காக வடிவமைக்கப் படவுள்ளது.  நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகும் படங்களில் இந்த படம் அதிக பட்ஜெட் படமாக இருக்கும். 
கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசுகிறது இன்னும் பெயரிடப்படாத இப்படம். 
“மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி இசைக்கலைஞராக நடிக்க, அவருடன் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். 
மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. மூனாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 
இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. 
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: 
தயாரிப்பு – சந்திரா ஆர்ட்ஸ் 
தயாரிப்பாளர்- இசக்கி துரை
எழுத்து மற்றும் இயக்கம் – வெங்கட கிருஷ்ண ரோகாந்த்
இனைத்தயாரிப்பு – சினி இன்னோவேஷன்ஸ்
இனைத்தயாரிப்பாளர் – ஆர்.கே. அஜெய்குமார்
இசை – நிவாஸ் கே. பிரசன்னா
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசுவாமி
கலை இயக்குநர் – ஜான் பிரிட்டோ
ஸ்டண்ட் – மிரக்கில் மைகேல்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்