சி.பி.ஐ. விசாரணை குட்கா விவகாரத்தில் அவசியம் – உயர்நீதிமன்றம்

குட்கா லஞ்ச விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி திமுகவின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்திருத்த வழக்கானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, குட்கா லஞ்ச விவகாரத்தில் சி.பி.ஐ.விசாரணை அவசியம் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் டி.ஜி.பி. கவால்துறை அதிகாரிகளுக்கு எதிரான லஞ்ச புகார் என்பது முக்கிய பிரச்சனை என்று கூறியுள்ள நீதிபதிகள் அரசு தரப்பு வாதத்தை முன்வைக்க கோரினர்.
தமிழக அரசு தரப்பு வாதத்தை தொடர்ந்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்க உள்ளனர். முன்னதாக அரசு தரப்பில் இது தொடர்பாக டி.ஜி.பி.பணி நியமனம் தொடர்பான வழக்கு மதுரை கிளையில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டபோது, பதவி உயர்வு வழக்கு வேறு காவல் துறை அதிகாரிகள் மீது விசாரணைக்காக தொடுக்கப்பட்ட இந்த வழக்கு வேறு என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தை முன் வைத்து நீதிமன்றத்தில் வாதாடினார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அமர்வு தமிழக அரசு பதிலளிக்க நோட்ஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளார்.