கேமரா எரர் விமர்சனம்

உண்மைச் சம்பவங்களை படமாக எடுக்க படக்குழுவினர் ஒரு மலை கிராமத்திற்கு செல்கின்றனர். தினமும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஆனால் ஒவ்வொரு நாளும் படக்குழுவினரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சந்தேகத்துடன் கவனிக்கையில் அங்கே இறந்துபோனவர்களின் ஆவிகள் இவர்களுடன் கலந்துவிடுகின்றனர்.

இப்படி பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் படக்குழுவினர் ஆவிகளிடமிருந்து தப்பித்தார்களா? படப்பிடிப்பை முடித்தார்களா? என்று பரபரப்பாக சொல்லுவதே கதைக்களம்.

புதுமுகங்கள் பலர் நடித்திருந்தாலும் கதைக்கு ஏற்றவாறு சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.

படப்பிடிப்பில் இயக்குநர் காட்சியை விளக்கிவிட்டு ஆக்ஷன் என்றதும் அக்காட்சியில் நடிப்பவர்களே யோசித்து வைத்த வசனத்தை சொல்லி நடிக்க வேண்டும். இப்படித்தான் படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு படத்தை எடுத்த இயக்குனர் அகரனுக்கு வாழ்த்துக்கள்.

நடிகை-நடிகர்கள்:

சுதிர், பிரபாகரன், ஹரிணி, சிம்ரன் மற்றும் பல புதுமுகங்கள்

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பாளர் – விஸ்டர் எண்டர்டெயின்மெண்ட், துபாய் மிஸ்ரா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அகரன்
இசை – ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு – பாலாஜி எஸ்.பி.