சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில், ராகத் மிருதாத் இயக்கத்தில், புதுமுகம் ராஜு ஜெயமோகன், விக்ராந்த், ஆதியா, பவ்யா ட்ரிக்கா, சார்லி, சரண்யா, தேவதர்ஷினி, மைக்கேல் , டாக்டர் லங்கேஷ், நிஹாரிகா, விஜே பப்பு, பாரதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பன் பட்டர் ஜாம்.
ராஜு (சந்துரு) கல்லூரி படிக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தாலும் பெண்களிடம் பேசுவதற்கு சற்றே கூச்சம் சுபாவம் கொண்டவராக இருக்கிறார். அதற்கு காரணம் அவருடைய அம்மா சரண்யா. அப்பாவாக சார்லி.
பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் போது பெண்களிடம் எப்படி பழகுவது என்று நண்பர்களிடம் ஆலோசனை கேட்கிறார் ராஜீ. கல்லூரிக்கு செல்லும்போது தன்னுடைய வகுப்பறை எங்கே என்று கேட்கும் பவ்யாவை (நந்தினி) பார்த்து உளறுகிறார்.
சிறிது நாட்களில் இருவரும் நன்றாக பழகி காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த சமயத்தில் சந்துருவின் நெருங்கிய நண்பரான சரவணன் சண்டை போட்டு பிரிந்து விடுகிறார். அதற்குக் காரணம் நந்தினி தான் என்பது சந்துருவிற்கு தெரியாது.
இது இப்படி போய்க்கொண்டிருக்கையில் சந்துருவின் அம்மாவான சரண்யா பக்கத்து வீட்டில் இருக்கும் திவ்யதர்ஷினியின் மகள் ஆதியாவை (மது) சந்துருவுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்து திவ்யதர்சனியும் சரண்யாவும் ப்ளான் போடுகிறார்கள்.
ஆனால் மதுவோ வேறு ஒரு பையனை விரும்புகிறார்.
இதற்கிடையில் சரவணனை சந்தித்து சந்துருவிடம் ஏன் சண்டை போட்ட பேசு என்று சொல்லும் நந்தினியிடம் அதற்கு காரணம் நீதான் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்கிறார் சரவணன்.
இதனால் நந்தினியின் மனதில் மாற்றம் ஏற்பட சந்துருவா சரவணனா என்ற முடிவு ஏற்படும் நிலை ஏற்படுகிறது.
நந்தினி யாரை தன்னுடைய காதலனாக ஏற்றுக் கொண்டார்? சரண்யாவும் திவ்யதர்ஷினியும் போட்ட திட்டம் நிறைவேறியதா? இல்லையா? சந்துரு யாரை திருமணம் செய்து கொண்டார்? என்பதே பன் பட்டர் ஜாம் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : ராகவ் மிர்தாத்
இசை : நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு : பாபுகுமார்
தயாரிப்பு : சுரேஷ் சுப்பிரமணியம்
மக்கள் தொடர்பு : ஜான்சன்